Wednesday, 12 April 2023

Ganesh Ratham/ கணேச ரதம், மாமல்லபுரம் / Mahabalipuram / Mamallapuram, an UNESCO World Heritage Site, Chengalpattu District, Tamil Nadu.

The visit to this Ganesha Ratha, a monolithic Rock Cut Temple was a Part of “Mamallapuram Heritage Visit”, under the title – “Known Mamallapuram, Unknown places –தெரிந்த மாமல்லபுரம்தெரியாத இடங்கள்” organised by SASTRA & Chithiram Pesuthada Groups on 19th March 2023. This is one of the group of monuments of Mamallapuram a UNESCO Heritage site of Tamil Nadu.


வராக குடைவரைக்குச் செல்லும் பாதையில் இந்த கணேச ரதம் என்னும் அழகு வாய்ந்த ஒற்றைக் கல்தளி உள்ளது. மாமல்லபுரம் ஒற்றைக் கல் தளிகளுள் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். கருவறை செவ்வக வடிவில் உள்ளது. முன்புறம் காணப்படும் சிறிய முகமண்டபத்தை இரண்டு சிங்கத்தூண்களும் 2 அரைத்தூண்களும் தாங்குகின்றன. இந்த ஒற்றைத்தளியில் அதிட்டானம் காட்டப்பவில்லை. அதிட்டானத்திற்கு மேல் ஒரு கோயிலுக்கு உரிய அனைத்து உறுப்புகளும் காட்டப்பட்டு, ஐந்து ரதங்களுள் ஒன்றான பீமரதத்தை ஒத்துக் காணப்படுகின்றது. பிரஸ்தரத்தில், கபோதம் நாசிக்கூடுகாளுடனும், பூமிதேசாத்தில்யாளி வரியும் அமைக்கப்பட்டுள்ளது. ஆதிதளத்துடன் சேர்த்து மூன்று தள சாலாகார விமானமாக காட்சி தருகின்றது. ஹாரம் எனப்படும் சிறு சிறு சாலை அமைப்புகள் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் காணப்படுகின்றது. விமானத்தின் உச்சிபகுதியில் 9 கலசங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கிரீவத்தின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டு இருக்கும் விருத்தஸ்புடிதம் அமைப்பு, அதற்கும் மேலே காணப்படும் மனித உருவம், அதன் தலையில் உள்ள கொம்பு போன்ற அமைப்பு, அதற்கும் மேலே காணப்படும் ஒரு திரிசூல அமைப்பு, இவையெல்லாம் இந்த ஒற்றைக் கல்தளியின் எழிலை மேலும் கூட்டுகின்றது.

கல்வெட்டுக்களின் படி, இக்கற்றளி முதலாம் பரமேஸ்வரவர்மனால் சிவனுக்காக எழுப்பபட்டது. ஆனால் கருவரையில் சிவலிங்கத்திற்கு பதிலாக தற்போது விநாயகர் காணப்படுகின்றார். எப்போது யாரால் மாற்றப்பட்டார் என்று அறியக்கூடவில்லை.


The path leading towards Varaha Cave leads to Ganesa Ratha one of the finest monolithic temples at Mahabalipuram. The Monolithic Temple is rectangular on plan and has dvitala sala Vimanam. The Adhisthana is not defined. The narrow mukha mandapa has two Lion Pillars and pilasters. The dwarapalakas are in the karnapathi. This Ganesha ratha resembles to Bima Ratha.  Haras are on the first tala. On the top of the roof human head decorated by trident shaped head gear, side prongs suggesting the horns, on the vrutha spuditham, enhances the beauty of the monolithic rock cut shrine. This enhances the beauty of the vimanam. The roof has nine vase shaped finials / kalasas and is the precursor of the latter gopuram.

Originally there was a Shiva Lingam and the same was replaced by a Ganesa idol and do not know when the same was replaced. Regular poojas are conducted.


HISTORY AND INSCRIPTIONS
This monolithic  temple dedicated to Shiva is known as “Atyantakama Pallavesvaram” from thr inscription of the temple. The title Atyantakama is identified with Parameswaravarman-I ( 672 – 700 CE ).

இடம்           : கணேசர் இரதம்
அரசன்          : முதலாம் பரமேஸ்வரவர்மன்
காலம்          :  பொ..669-700
மொழி & எழுத்து சமஸ்கிருதம் & பல்லவ கிரந்தம்

கல்வெட்டு செய்தி : இக்கல்வெட்டு அத்யந்தகாம என்ற பட்ட பெயர் கொண்ட முதலாம் பரமேஸ்வரவர்னால் சிவனுக்காக (சம்புஇக்கோயில் கட்டப்பட்டது என்று குறிப்பிடுகிறதுஇக்கோவிலின் பெயர் அத்யந்தகாம பல்லவேஸ்வரக்ரஹம் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதுஇம்மன்னின் விருது பெயர்களான பரமேஸ்வரர்ஸ்ரீநிதிஸ்ரீபாரரணஜெய, தருணங்குராகமரக முதலியனவையும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டு வாசகம்
1.ஸம்பவஸ்திதி சம்ஹாரகாரணம் வீதகாரணஹ் (*) பூயாததியந்தகாமாய ஜகதோ காமமர்தநஹ் !!

2.அமாயஸ்சித்ரமாயோலாவகுணோ குணபாஜந்ஹ் [*] ஸ்வஸ்தோ நிருத்தரோ ஜீயாதன்நீஸஹ் பரமேஸ்வரஹ் (2*1)

3.யஸ்யாங்குஸ்டபராக்ராந்தஹ் கைலாஸ்ஹ் எஸ்தஸாநநஹ் (*) பாதாளமகமந்மூர்த்தநா ஸ்ரீநிதிஸ்டம்பிபர்த்யஜம் [//3*)

4.பக்திப்ரவேண மாநஸா பவம்பூஸணம்லீலயா (*) தோஸ்ணா  யோ புவோ பாரஞ்ஜியாத்ஸ் ஸ்ரீபரஸ்சிரம் [//4]

5.அத்யந்தகாமோ ந்ருபதிந்நிர்ஜ்ஜிதாராதிமண்டலஹ் (*) க்யாதோ ரணஜயஹ்
ஸ்தம்போஸ்தேநேதம் வேஸ்டி காரிதம் (//5)  

6. ஜ்குஹ் ஸ்தாணுர்ந்நிஸ்கல ஸோமஹ் பாவகாத்மா வியத்வபுஹ் [*] பீமஹ் பீவோ விஜயதாம் ஸங்கரஹ் காமஸுதநஹ் [//6] 

7. ராஜராஜோ  விரஸஸ்சக்ரப்ரந்த ஐநார்த்தநஹ் (*) தாரகாதிபதிஹ் வஸ்தோ ஐயதாத்தருணாங்குரஹ்  #[7*]

8. ஸ்ரீமதோத்யந்தகாமஸ்ய த்விஸத்தர்ப்பாபஹாரிணஹ் [*] ஸ்ரீநிதேஹ் காமராகஸ்ய ஹராராதநலங்கிநஹ் [#8*]

9. அபிசேஸகஜலாபூர்ண்ணே சித்ர்ரத்நாம்புஜாகரே (*) ஆஸ்தேவிஸாலே ஸுமுகஹ் ஸிரஸ்ஸரஸி ஸங்கரஹ் [9*] 

10.தேநேதங்காரிதந்துங்கந்தூர்ஜ்ஜடேர்ம்மந்திரக்ருஹ்ம் (*) ப்ரஜாநாமிஸ்ட ஸித்தியர்தம் ஸாங்கரிம்பூதிமிச்சதா [//10]

11.திக்தேஸாந்திக்தேசஸாம்புநரபி திக்திக்திகஸ்து திக்தோஸாம் [*] யேந்த வஸதி ஹ்ருதயே குபதகதிவிமோ-

12 க்ஷகோ ருத்ரஹ் #[11] அத்யந்தகாமபல்லவேஸ்வரக்குஹ (ம்;//) 

“Atyantakama Pallavesvara Gruham” from thr inscription

Ref: 1. Kanchipuram Mavatta Tholliyal Kaiyedu.
       2. Mamallapuram by Prof. Swaminathan
       3. SII Volume. XII

LOCATION OF THE CAVE TEMPLE:      CLICK HERE



… My Previous visit posts continuation post to Krishna Mandapam , Mahabalipuram, A Heritage visit, Part – 8.
… to be continued with UNESCI Heritage sites Misc at Mahabalaipuram, A Heritage Visit, Part – 10.
--- OM SHIVAYA NAMA --- 

No comments:

Post a Comment