Monday, 14 February 2022

Sri Adinath and Mahavira Tirthankara Temple, Kolapakkam, Chennai, Tamil Nadu.

The Visit to this Sri Adinatha and Mahavira Tirthankara Temple at Kolapakkam was a part of Shiva Temples, Maha Vishnu Temple, Jain Temple and Buddhist temple at Anakaputhur, Tharapakkam, Kolapakkam and Buddhavedu on 26th December 2021. Initially it was not planned to Visit this temple, after Visiting Sri Agastheeswarar Temple, on the way happened to see this Jain Temple. Another purpose of the visit was to see the Buddha sculptures unearthed in Kolapakkam Village, which was published long back. The details are given below.


Moolavar : Sri Adinath and Mahavir.

The Adinath Tirthankara image is little large and Mahavira Tirthankara is little small. Samaratharis and Thindu are shown on both images. Mukkudi is missing for Mahavira Tirthankara image.

Both the Tirthankaras are wrongly identified as Buddhas by the Archaeological Department. The news appeared in THE HINDU and the pictures taken at the time of finding are enclosed. Many debates were happened and ugly scenes were staged behind the identification and Publishing these Tirthankaras as Buddhas. The sad part of it is, still some so called Researchers makes the learners to believe that these are Buddhas. 
  



HISTORY
It is believed that there was a Jain temple existed on the same place where both idols are found abandoned. It is also believed that these two idols belongs to 10th century. But the experts of the opinion that these may belongs to 12th to 13th Century. Both image’s faces are re-worked. This new temple was constructed with the help of the villagers, donors and consecrated on 25th April 2010.

கொளப்பாகம் சிவன் கோயில் தரிசனம் முடிந்த பின்பு வரும் வழியே இந்த சமணர் கோயிலைக் காண நேர்ந்ததுஆதி பகவான் மற்றும் மகாவீரர் இங்கு மூலவர்களாக இருக்கின்றனர்இருவரும் பின்புறம் திண்டுடனும்சாமரதாரிகளுடன் காணப்படுகின்றனர்ஆதிநாதர் பிம்பம் அளவில் சற்று பெரியதுமகாவீரரின் தலைக்கு மேலே முக்குடை காணப்படவில்லை.

இவர்கள் இருவரும் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சுமார் 1000ம் வருடங்களுக்கு முன்பு சமணர் கோயில் இருந்ததாகக் நம்பப்படுகின்றதுஅந்த இடத்திலேயே ஊராரின் ஒத்துழைப்புடன் புதிதாக கோயில் அமைக்கப்பட்டு 2010ம் வருடம் ஏப்ரல் மாதம் 25ந்தேதி இப்பிம்பங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டனஇவர்கள் இருவரும் சுமார் ஆயிரம் வருடங்கள் பழமையானவர்களாக கருதப்படுகின்றனர்ஆனால் ஆய்வாளர்களின் கருத்து படி இவர்கள் 12 – அல்லது 13 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

இச்சமண பிம்பங்கள் புத்தர் என அடையாளப்படுத்தப்பட்டது, திருடப்பட்டு மீண்டு வந்த வரலாறு….

இந்த சமணர் கோயிலுக்கு சென்று வந்த பின்பு இப்பதிவு எழுத ஆரம்பித்தேன். அதற்காக வரலாற்றை தேடவேண்டி இருந்தது. அப்போது கிடைத்த விபரங்கள் சிறிது அதிர்ச்சியையும் மனதைக் களங்கவும் வைத்தது. ஆதிநாதர், மகாவீரர் பிம்பங்கள் மற்றும் இரு தூண்கள் கிடைத்த போது THE HINDU என்ற தினசெய்தித்தாளில் 2006 ஆம் வருடம் பிப்ரவரி 2ந்தேதி செய்தி வந்து இருந்தது. அச்செய்தியில் இந்திய தொல்லியல் துறையின் மூத்த ( ASI ) அதிகாரியும், கல்வெட்டு ஆய்வாளர் ஒருவரும் இவ்விருபிம்பங்களையும் புத்தர் என அடையாளப்படுத்தியதாக செய்தி வெளியிட்டு இருந்தனர். மேலும் அச்செய்தியில் கொளப்பாக்கம் சிவன் கோயிலின் கல்வெட்டுக்களைத் தொடர்புபடுத்தி, மூன்று புத்த விகாரங்கள் இருந்ததாகவும், சுமத்திரா மன்னர் விஜய மகராஜாவின் கொடையையும் மேற்கோள் காட்டி இருந்தனர் ( பார்திவேந்திர மன்னனின் மற்றொரு பெயர் என்பது பிற்காலச் செய்தி ). இச்செய்தி தவறு என்றும் அவர்கள் புத்தர்கள் அல்ல, சமண தீர்த்தங்கரர்கள் தான் என்று சுட்டிக்காட்டிய புத்த ஆய்வாளர்கள் மற்றும் வாசகர்களுக்கு அவை புத்தர்கள் தான் என்றும் பதில் அளிக்கப்பட்டது..

மேலும் தஞ்சை பவுத்த சிற்பங்கள் ஆய்வாளர் திரு ஜம்புலிஙம் அய்யா எழுதிய கடிதத்திற்கு 2006 ஆம் வருடம் பிப்ரவரி 18ந்தேதி அதே THE HINDU செய்திதாள் மீண்டும் அந்த சிற்பங்கள் புத்தர் தான் என்று செய்தி வெளியிட்டு இருந்தது. மீண்டும் 2009 ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் 9ம் தேதி அந்த பிம்பங்கள் தீர்த்தங்கர்கள் என்று THE HINDU செய்தி வெளியிட்டு இருந்தது. அதில் பல வாசகர்கள் அந்த பிம்பங்கள் தீர்த்தங்கரர்கள் என்று சுட்டிக்காட்டி இருந்ததாக கூறி இருந்தது. இதனிடையே தமிழ் சாமணர்களால் நடத்தப்படும் முக்குடை என்ற் மாத இதழில் அப்பிம்பங்கள் தீர்த்தங்கர்கள் தாம் என்று பிரசுரித்து இருந்தது. 2009 ஆம் வருடம் ஜூன் ஜூலை மாதவாக்கில் 4 ஆட்கள் வந்து தங்களுக்கு எடுத்துச்செல்ல அனுமதி இருப்பதாகக் கூறி, ஒரு வேனில் அப்பிம்பங்களை எடுத்துச்சென்று விட்டனர். மர்மமான முறையில் அவை மீண்டும் பழைய இடத்திற்கே திரும்ப வந்து வேம்புலி அம்மன் கோயிலில் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, போரூர் காரம்பாக்கம் ஸ்வேதாம்பரர் கோயில் நிர்வாகி ஸ்ரீ முனீஸ்சுவர்ட் ஸ்வாமி தங்களின் கோயிலில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனக்கேட்டு இருந்தார் ( இதற்கு பின்னால் நடந்த அரசியல் நமக்கு தெரியாது ). பஞ்சாயத்து துணை தலைவர் திரு வி பரந்தாமன் அவர்களால் போரூர் காரம்பக்கம் ஸ்வேதாம்பரர் கோயிலுக்கு கொடுக்க சம்மதித்த நிலையில், ஊராரின் தலையீட்டாலும் எதிர்ப்பாலும் அக்கோரிக்கை கைவிடப்பட்டது. திரு பரந்தாமன் அப்போதைய பஞ்சாயத்து துணை தலைவர் அவர்களால், பிம்பங்கள் எடுத்த இடத்திலேயே கோவில் கட்டிக்கொள்ள ஊரார்வசமே ஒப்படைக்கப்பட்டது. பின்பு 2010ல், அவ்விரு தீர்த்தங்கரர் பிம்பங்களும் புதிதாகக் கட்டப்பட்ட கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன..

புத்தருக்கும் சமண தீர்த்தங்கரருக்கும் வித்யாசம் தெரியாமல் அரசு தொல்லிய துறை அதிகாரிகளே இருக்கும் போது, அவர்களைப் பின்பற்றுபவர்களும் அவர்கள் கூறியதே சரி என்று நம்பும் போது.. பொது மக்களாகிய நாம் எது உண்மை எது தவறு என்று எடுத்துக்கொள்வது.. அந்த ஆதிநாதருக்கும் மகாவீரருக்கும் மட்டுமே வெளிச்சம்..      

CONTACT PERSONS
KP Udhaya Kumar +91 9884909599, N Ajithadass, A Mohan +9191761 36789 and Bharatraja may be contacted for Poojas and further details.

HOW TO REACH
This Jain Temple at Kolapakkam is about 7 KM from Anakaputhur Sri Agastheeswarar Temple, 4.6 KM from Porur, 6 KM from Kovur, 7.7 KM from Kundrathur, 11 KM from Guindy and 20 KM from Chennai Central.

LOCATION OF THE TEMPLE : CLICK HERE


--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment