Tuesday, 29 August 2023

Chitramezhi Inscription Stone, Thondanoor, தொண்டனூர் / Thondanur, Mandya District, Kantaka.

The Visit to this Thondanoor Chitramezhi Stone, was a part of “Karnataka State, Hoysala Period Shiva and temple’s visit”- on 30th July 2023, organised by தொண்டை மண்டல வரலாற்று ஆய்வு சங்கம் "திருக்கச்சிFB Group. This place is now called as Thonnur. The Chitramezhi Stone and Thorana vayil are installed before the Sri Venugopalaswamy Temple also called as Shri Parthasarathi and Shri Gopalakrishna Swami Temple at Thondanoor, in Karnataka.  It is believed that the saint Ramanuja stayed in this temple during the renovation of Sri Nambi Narayana Perumal Temple.


The inscription on the thorana Vayil records the name of the Thiruvayil as “Svathi Sri Veera Vallalan Thiruchopuram- ஸ்வஸ்திஸ்ரீ வீர வல்லாளன் திருக்கோபுரம்". From this it is presumed that this Thorana Vayil was constructed during Veeravallala’s period.

On the other side of the road there is a Chitramezhi Stone over which there is an umbrella is shown. Narasimhachariar records the local legend about this connection between the two. As per the Local Legend, due to conflict between the kal thatchers ( sthapathis ), the Thorana vayil was constructed by Vellalars without the help of Kal Thatchers. The Vira Ballalan happened to see the Gopura and was very happy. He ordered that Kalthatchars should hold the umbrella to Vellalars at the time of completion of the Thorana.


As per the experts, the legends like this may be created due to the conflicts between Idangai and Valangai groups, which was on the peak during King’s rule. The Vellalars calls themselves as they are the sons of this Bhumi and Parameswari as Kula Deivam. The merchant Groups like “Chitramezhi Periya Nattar’s Sabha”, “Pathinen Bhumi Nattars” “Pathinen Desa Vishayathar”also Joined hands with Vellalars. The Vellalars used these merchant group names as meikirthis, like kings used to do. There are many evidences found in the form of inscriptions in Karnataka region.   Epigraphia carnatica…

Inscription No: 78 (XIV - 244) Epigraphia Carnatica Volume SIX.
This Tamil record in Tamil Grantha Characters of the 13th Century refers to the Viravallalan Gopura Named after Hoysala Viravallala.

மாண்டியா மாவட்டம் பாண்டவபுரத்திலுள்ள தொன்னூர் என்னுமிடத்தில் ஹொய்சாளர் காலத்திய கற்றளிகள் அமைந்துள்ளன ( தொன்னூர் அக்காலத்தில் தொண்டனூர் என்கிற யாதவ நாராயண சதுர்வேதிமங்கலம் என தமிழ் கல்வெட்டுகளில் குறிப்பிடபடுகிறது. இராமானுஜர் இங்கு சில காலம் தங்கியிருந்தது வைணவ சமய பணியாற்றியதாக கூறப்படுவதுண்டு ) இங்குள்ள கோபாலகிருஷ்ணசுவாமி கோயில் வளாகத்தில் கருங்கல்லில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தோரணவாயில் அமைந்துள்ளது இதில் "ஸ்வஸ்திஸ்ரீ வீர வல்லாளன் திருக்கோபுரம்" என்று தமிழ் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளதால் இது இரண்டாம் வீரவல்லாளன் காலத்தியது என உணரலாம் மேலும் இதனருகே கோயில் வலதுபுறத்தில் மதிற்சுவரை ஒட்டியவாறு மேற்புறத்தில் அரைவட்ட வடிவும் நீள் சதுர அமைப்பும் கொண்டு சுமார் 51/2 அடி உயரமும் 3 அடி அகலமும் உடைய ஒரு கல்லில் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன அதில் ஏர்கலப்பையும் அதன் மேல் வெண்கொற்றக் குடையும் வடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு எதுவும் இல்லை!

இருப்பினும் நரசிம்மாச்சாரியார் தமது 1905-6 ஆம் வருடத்திய தொல்லியல் ஆண்டறிக்கையில் இது குறித்து தொன்னூர் மக்கள் கூறிய மரபு வழிச்செய்தியை குறிப்பிடுகிறார் அதாவது இரண்டாம் வீரவல்லாளன் ஆட்சி காலத்தில் இங்கு தோரண வாயில் அமைப்பது குறித்து கட்டிடதச்சர்கள் மற்றும் வேளாண்குடியிடையே கருத்து பேதம் ஏற்பட்டதால் தச்சர்களின் உதவியின்றி உழவுக்குடியினரே தங்கள் முழு உழைப்பையும் கொண்டு தோரண வாயிலை கட்டத் தொடங்கினர் எனவும்

வேளாண்குடியினரின் இந் நற்செயலின் பால் பெரிதும் மகிழ்ச்சியுற்ற அரசன் வீர வல்லாளன் இந்த கட்டிடபணி முடிவடையும் நன்னாளில்  தச்சர்கள் உழவர்களுக்கு குடை பிடித்து வர வேண்டும் என்ற நிபந்தனையை விதித்ததாகவும் அப்படியே நடந்ததாகவும் இந்நிகழ்வை குறிக்கும் வகையில் இச்சிற்பம் அமைக்கப்பட்டது எனவும் அக்காலத்தில் இவ்வூர் மக்கள் கூறியதாக அந்த ஆண்டறிக்கையில் விவரித்துள்ளார். மேலும் இதை உறுதிபடுத்தும் முகமாக இந்த கோபாலகிருஷ்ணசுவாமி கோயில் கல்வெட்டுகளில் இரண்டாம் வீரவல்லாளன் காலத்திற்கு பின்னர் வந்த ஹொய்சாள மன்னர்களின் கல்வெட்டுகளோ அல்லது விஜயநகரப் பேரரசு கால கல்வெட்டுகளோ காணப்படாததை குறித்தும் வியப்புடன் குறிப்பிடுகிறார்.

இந்நிகழ்வு அக்காலத்தில் நடந்த வலங்கை இடங்கை பிரிவினருக்கிடையேயான பூசலின் அடிப்படையில் தோன்றிய செவிவழி செய்தி என கருதலாம். மேலும் அழகிய ஏர்கலப்பை என்ற பொருள்படும் இந்த சித்திரமேழி சின்னம் உழவுத் தொழிலை அடிப்படையாக கொண்ட வேளாண் மக்கள் கூட்டமைப்பின் அதிகார குறியீடாக கருதப்பட்டது எனவும் இவற்றில் வேளாண் உற்பத்தி சார்ந்த வணிக குழுக்களும் இணைந்து சித்திரமேழி பெருநாட்டார்சபை எனவும் வழங்கலாயிற்று இவர்கள் தங்களை பூமி புத்திர்ரகள் என அழைத்து கொண்டனர் பரமேஸ்வரியை குல தெய்வமாக கொண்டனர் என்பதையும்" பதிணென் தேச விஷயத்தார்" மற்றும் பதிணென்பூமி நாட்டார் எனவும் தங்கள் மெய்கீர்த்திகளில் குறிப்பிடுகின்றனர் ( ஹல ஆலூர், மங்கலம், கொள்ளேகாலா ) கர்நாடகத்தில் நூற்றாண்டு கால சோழர் ஆட்சியில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த இவர்கள் நிலை ஹொய்சாளர் ஆட்சியிலும் தொடர்ந்தது தமிழக கல்வெட்டுகளில் வேளான், நாட்டார் என அழைக்கப்படும்  இவர்கள் கர்நாடகத்தில் நாட்டு காமுண்டா, ஊர் காமுண்டா பிரபு காமுண்டா என குறிப்பிடப் படுகின்றனர்

அக்கால சமூகத்தில் முதன்மை நிலை பெற்றிருந்த இவர்கள் அரசு அதிகாரிகளாகவும் ஊர் மற்றும் கிராமத்தை நிர்வகிக்கும் பங்கும் பெற்றிருந்தனர் அரசின் பிரதிநிதிகளாக கற்றளியெழுப்பி பழுதடைந்தவற்றை சீர் செய்து தானங்கள் வழங்கினர் ஏரி,குளம் வெட்டுதல் போன்ற நற் காரியங்களை செய்தனர் இதனால் அரசருக்கிணையாக மெய்கீரத்தி, படை, வெண்கொற்றக் குடை பயன்படுத்தி கொள்ளும் அதிகாரங்களை பெற்றிருந்தனர் இதை தான் ஏர் கலப்பை மேல் வெண்கொற்றக் குடை தாங்கி நிற்கும் இந்த சிற்பம் குறிப்பிடுகிறது என கருதலாம்.

Ref
Annual Report 1905-06 of Archaeology, by Narasimhachariar
Epigraphia Carnatica Volume SIX.
John peter’s article on Face book

HOW TO REACH
This place is 14 KM from Pandavapura railway Station, 20 KM from Srirangapatna, 69 KM from Mysore and 150 KM from Bangalore.
Nearest Railway station is Pandavapura.

LOCATION OF THE TEMPLE          : CLICK HERE


--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment