Saturday, 10 June 2023

Sri Arappaleeswarar Temple / Kollimalai Sivan Koil / கொல்லிமலை சிவன் கோவில், Araiyurnadu, Kollimalai, Namakkal District, Tamil Nadu.

The Visit to this Sri Arappaleeswarar Temple at Kolli Hills was a part of Kolli Hills Heritage walk  - “வல்வில் ஒரி தேச மரபு நடை... “organised by எண்திசை வரலாற்று மரபுநடை குழு, on 20th and 21st May 2023..


The Sangam literature Akananooru records this place and the King’s name Valvil Ori as……

முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்இசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈந்த
செவ்வேர்ப் பலவின் பயம்கெழு கொல்லி‘

This place was also called as அறைப்பள்ளி – அறை ( மலை ) + பள்ளி ( கோயில் )Both Thirugnanasambandar and Thirunavukkarasu Swamigal mentioned this Kollimalai as Araippalli.

Ambalavana Kavirayar praised Shiva of this temple in his Arappalli Sathakam, in that he mentions this hill as Chathura Giri சதுரகிரி ). Last but one hymn on Shivamurthy is as given below.

சிவமூர்த்தி
பிறைசூடி யுமைநேசன் விடையூர்தி நடனமிடும்
        பெரியனுயிர் வதுவை வடிவன்
பிச்சாட னன்காம தகனன்மற லியைவென்ற
        பெம்மான் புரந்த கித்தோன்
மறமலி சலதரனை மாய்த்தவன் பிரமன்முடி
        வௌவினோன் வீரேசுரன்
மருவுலக சிங்கத்தை வென்றவா னுமைபாகன்
        வனசரன் கங்கா ளனே
விறண்மேவ சண்டேச ரக்ஷகன் சுடுமாந்தி
        மிக்கசக் கரமுதவி னோன்
விநாயகற் கருள்செய்தோன் குகனுமை யுடன்கூடி
        மினிரேக பாதன் சுகன்
அறிவரிய தக்ஷிணா மூர்த்தியொ டிலிங்கமா
        யையனே யருமை மதவே
ளனுதினமு மன தினினை தருசதுர கிரிவள
        ரறப்பளீ சுர தேவனே.  
… ……Arapalli sathagam  

Thirugnanasambandar mentions the places, the names  which are ends with Palli.

திருஞானசம்பந்தர் திருஷேத்திரக்கோவை
அறப்பள்ளி அகத்தியான்பள்ளி வெள்ளை பொடிபூசி ஆறு அணிவான் அமர் காட்டுப்பள்ளி
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திருநனிப்பள்ளி சீர் மகேந்திரத்து
பிறப்பி இல்லவன் பள்ளி வெள்ள சடையான் விரும்பும் இடைப்பள்ளி வண் சக்கரம் மால்
உறைப்பால் அடி போற்ற கொடுத்த பள்ளி உணராய்மட நெஞ்சமே உன்னி நின்றே
………Thirugnanasambandar

Thirunavukkarasu Swamigal praises this place where Shiva resides, in the hymns of Thiruneithanam, Adaivu Thiruthandagam and Thiruthandagam.

கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான்
புல்லி யார்புர மூன்றெரி செய்தவன்
நெல்லி யானிலை யானநெய்த் தானனைச்
சொல்லி மெய்தொழு வார்சுடர் வாணரே.   
……..Thiruneithanam  - Thirukurunthogai - 5-34-1
 
தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி
    தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்
    வீரட்டங் கோகரணங் கோடி காவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டி
    முழையூர் பழையாறை சத்தி முற்றங்
கல்லிற் றிகழ்சீரார் காளத் தியுங்
    கயிலாய நாதனையே காண லாமே.             
…….. Kshethra kovai- Thiruthandagam - 6-70-1

பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து
    புரந்தழியச் சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்
கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார்
    கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ்சாரற்
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி
    செழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார்
பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்
    பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே.
…….. Thirupoonthuruthi ( Adaivu Thiruthandakam )-  6-71-1
…………….Thirunavukkarasu Swamigal

Moolavar  : Sri Arappaleeswarar
Consort    : Sri Thayammai

Some of the salient features of this temple are…
The temple is facing east with Dwajasthambam, Balipeedam and Rishabam. Moolavar is of swayambhu. Plough hit mark can be seen on the top of the moolavar. In Koshtam, Vinayagar, Dakshinamurthy, Maha Vishnu, Brahma and Durgai.

In outer praharam Vinayagar, Sri Valli Devasena Subramaniyar, Kasi Viswanathar & Visalakshi, Chandikeswarar, Kala Bairavar.
 


The 15th century Saint Arunagirinathar has sung hymns in praise of Murugan of this temple…

தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
        சொல்லுகுண மூவந்த                 மெனவாகி
துய்யச துர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து
        தொய்யுபொரு ளாறங்க                மெனமேவும்
பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
        பல்குதமிழ் தானொன்றி                யிசையாகிப்
பல்லுயிரு மாயந்த மில்லசொரு பானந்த
        பௌவமுற வேநின்ற                  தருள்வாயே
கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
        கல்வருக வேநின்று                   குழலூதுங்
கையன்மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
        கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல்        கதிர்வேலா
கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
        கொள்ளைகொளு மாரன்கை            யலராலே
கொய்து தழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
        கொல்லிமலை மேனின்ற              பெருமாளே. 




ARCHITECTURE
The Temple consists of Sanctum sanctorum, antarala, ardha mandapam and maha mandapam. The Maha mandapam was built during Vijayanagara period and Durgai also installed at a latter date, since there is an inscription on the back side of Durgai. The Sanctum sanctorum is on a pada bandha adhisthanam with three patta kumudam. The Bhitti starts on pattika. Vishnukantha pilasters with kalasam, kudam, plain mandi, palakai, and vettu pothyals. The prastaram consists of valapi and kapotam with nasi kudus. A two tier vesara Vimanam is in the prastaram. Dakshinamurthy, Maha Vishnu, Brahama are in the tala and greeva koshtams. Ashtadikpalas and Siddhras / rishis images are on the Vimanam.
 



HISTORY AND INSCRIPTIONS
The temple might have been built during Chozha period.  The temple was situated in Valapur Nadu.

The Chozha period inscription records that Rajaraja Chozha’s great grand mother Madevi and wife of Kandaradita Chozha, visited the temple gave donation to this temple.

The inscriptions are recorded and published in Salem – Namakkal Mavatta kalvettukal, by Thanjavur, Tamil Palkalaikazhagam.

உத்தம சோழரின் பத்தாம் ஆட்சியாண்டு  ( 980 CE ) கருவறை நுழைவாயில் இடப்பக்கம் உள்ள கல்வெட்டு பிரதிகண்டன் என்பவன் திருவறப்பள்ளி ஆழ்வாருக்குக் கார்த்திகைத் திருவிழாவிற்குச் சாலைப்புறமாகக் குளம் உட்படக் கால்செய் நிலத்தைக் கொடையாக அளித்தமையைப் பதிவு செய்கின்றது.
Uthama Chozha’s 10th reign year ( 980 CE ), inscription on the left side of the sanctum sanctorum entrance records the endowment of Karthigai Thiruvizha celebration by Pirathikandan. For the same land was gifted to this temple.

உத்தம சோழரின் பத்தாம் ஆட்சியாண்டு ( 980 CE ) கோவில் மண்டபத்தில் இருக்கும் தனிக்கல்லில் உள்ள சிதைந்த கல்வெட்டு பிரதிகண்டன்தரச் சோழன் என்பவன் திருவறப்பள்ளி ஆழ்வார்க்குக் கார்த்திகைத் திருவிழாவின் பொருட்டுச் சாலைப் புறமாக அரை செய் நிலம்குளம் உட்படக் கொடையாக அளித்தமையைப் பதிவு செய்கின்றது. ( முன்புள்ள கல்வெட்டும் இக்கல்வெட்டும் ஒன்றுபோலத்தெரிகின்றது.. ஆனால் தஞ்சாவூர் பல்கலைக் கழகம் இருவேறு கல்வெட்டுக்களாகப் பதிவு செய்கின்றது. )
Uthama Chozha’s 10th reign year ( 980 CE ) inscription records the same message of the previous inscription.

உத்தமசோழரின் 16 ஆம் ஆட்சியாண்டு கருவறையின் நிலக்காலில் உள்ள கல்வெட்டு உத்தமச்சோழரின் தாயார் பராந்தகன் மாதேவடிகள் என்ற செம்பியன் மாதேவியார் கொல்லிமலையிலுள்ள பன்னிரண்டு ஊராரிடத்து நூறு கழஞ்சுப் பொன் கொடுத்து அதன் வட்டியைக் கொண்டுவரும் வருவாயை ஒவ்வொரு திங்களும் அறப்பள்ளி ஈசுவரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்த ஆவன செய்தமையைப் பதிவு செய்கின்றது.
UthamaChozha’s 16th reign year inscription on the entrance side Column stone records that Uthama Chozha’s mother Parantakan Madhevadigal alias Chembian Mahadevi, gave 100 kalanju gold to 12 villages of Kolli Hill. From the interest received, special worship was conducted every month.

கருவறையின் வடக்குப்புறச்சுவரில் உள்ள உத்தம சோழரின் 11 ஆம் ஆட்சியாண்டு ( 981 CE ) கல்வெட்டு அறப்பன்ளி ஈசுவரர் கோவிலில் பணி செய்துவந்த  மாணிகள் நால்வர் ( துறவிகள், கருமாணியாய் இரந்த கள்வனே - திவ் . இயற் 2.61 ) கழஞ்சு பொன் பெற்றுக்கொண்டு வெருணூர் நிலத்தில் பயிர்செய்து விளைந்த அரிசியில் சந்தி ஒன்றுக்குத் “திருவெள்ளறை காணம்”எனற அளவினால் நான்கு நாழியாக மூன்று சந்திக்கு பன்னிரு நாழி அரிசி பெற்றுப் பூசை செய்ய ஒப்புக்கொண்டமையைப் பதிவு செய்கின்றது.
Uthama Chozha’s 11th reign year inscription on the north wall of the sanctum sanctorum records that 4 monks ( manikal ) received a Kalanju Gold, and the yield from the Verunur Village  to be used for naivedyam for sandhi pooja. The rice is measured in “Thiruvellarai Kanam”, measure.

உத்தமச் சோழரின் 14ஆவது ஆட்சியாண்டு ( 984 CE ) கருவறையின் வடக்குப்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு  மழப்பெருமாள் என்பவரின் மருமகள் கணலைத்தாதியர் என்பவர் திருவறப்பள்ளி இறைவர்குக் கார்த்திகைத் திருநாளின்போது விளக்கு வைக்கக் கொல்லிமலை நாட்டாரிடம் “மலைக்கல்” என்ற எடையினால் இரு கழஞ்சுப் பொன் கொடுத்த செய்தியைப் பதிவு செய்கின்றது.
Uthama Chozha’s 14th reign year inscription on the entrance north wall records the endowment of burining lamp on Karthigai Thirunal, by Mazhaperumal’s daughter-in-law. For the same she had given 2 Kalanju gold measured in “Malaikkal”, to the Kollimalai Nattars.

பொயு 11 ஆம் நூற்றாண்டு கருவறையின் மேற்குப்பறச் சுவரில் உள்ள கல்வெட்டு திருவறப்பள்ளி சபையாரிடம் இருபது கழஞ்சு பொன் பெற்று அதற்குக் கழஞ்சுக்கு ஆறு திங்களுக்கு வட்டியாகக் ஐங்குறுணி வீதம் இருபது கழஞ்சுக்கு ஆண்டுக்கு வட்டியாகப் பதினாறு கலனே இருதூணி நெல் பெறப்பட்டது. இந்த நெல்லில் கோவில் உவச்சு (மேளம் ) கொட்டும் ஒருவனுக்கு நாள்தோறும் கொங்கம் என்னும் அளவால் மூன்று நாழியாக ஆண்டுக்குப் பதினொரு கலனே முக்குறுணி அளக்கப்பெற்றது. எஞ்சிய ஐங்கலனே ஐங்குறுணி நெல்லுடன் பருவூர் பலகுடிகள் பெற்ற கழஞ்சுப் பொன்னின் வட்டியும் சேர்த்து மொத்தம் பத்து கலனே குறுணியும் கோவிலில் மூன்று வேளையும் சங்கு ஓது வனுக்குக் கொடுக்கப்பெற்ற செய்தியினைப் பதிவு செய்கின்றது.
A 11th Century inscription on the sanctum Sanctorum west wall records the endowment of distributing paddy to the Melam player and Chankhu blower from the interest earned to the capital amount of 20 kalanju Gold received from Thiruvarappalli Sabha. 

முதலாம் ராஜேந்திரனின் காலத்தைச் ( 1024 CE ) சார்ந்த கருவறையின் வடக்குப்புறச்சுவரில் உள்ள 4 துண்டு கல்வெட்டுக்கள் திருவறப்பள்ளியுடைய இறைவர்க்கு முன்னரே திருவமுதுக்காகப் பெற்ற நிலத்தை இரட்டித்து வெருகணூ ரிலும் மங்கலத்திலும் நெல் வருவாய்க்கு ஆவன செய்யப்பெற்ற செய்தியைப் பதிவு செய்கின்றது,
Rajendra Chozha’s 4 fragment inscriptions records the endowment of naivedyam to Thiruvarappalliudaiyar. For the same income of the paddy was ensured. 

முதலாம் குலோத்துங்கனின் 12 ஆம் ஆட்சியாண்டு கருவறையின் தென்மேற்குப்புறச்சுவரில் உள்ள கல்வெட்டு இராசமகேந்திர தேவர் ( முதலாம் இராஜேந்திரரின் மூன்றாவது மகன் ) ஆட்சிக் காலத்தில் கொல்லிமலை நாட்டில் வாயனூரார் செலுத்த வேண்டிய வரியைத் திருவறப்பள்ளி இறைவர்க்குச் செலுத்துமாறு ஆவன செய்யப்பெற்றதுஅப்பணி தொடர்ந்து  நடைபெறவில்லைஅரசனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் கொல்லிமலை நாட்டாரும் கோவில் தாநத்தாரும் பல மண்டலத்து மாயேசுவரர்களும் அதை மீண்டு நடைமுறைக்குக் கொண்டு வந்தனர் . அதனால் வயலூராரிடமிருந்து வரவேண்டிய நான்கு கல நெல் விதைப்பாட்டளவினால் நிலவருவாய் மீண்டும் அறப்பள்ளி இறைவர்க்கு உரிமையாக்கப்பெற்றது.
Kulothunga Chozha’I’s 12th reign year inscription on the sanctum sanctorum south west side records that Rajamahendra’s period ( Rajendra Chozha’s 3rd son ), the payment of the taxes by Vayanur Villagers  was ensured. It was not continued. This was again brought back again by the Kollimalai Nattars, Temple donors and Many mandala maheswaras. This ensured the receipt of 4 kalam paddy from Vayalur Villagers to this temple.

இரண்டாம் இராசாதி ராஜரின் ஒன்பதாவது ஆட்சியாண்டு 1172 CE கருவறையின் தென்புறச்சுவரில் உள்ள கல்வெட்டு வீற்றிருந்தான் சேமாண்டரான பிள்ளை அகளங்க நாடாழ்வார்க்குக் கொல்லிமலை மலையாள நாட்டவர் கல்வெட்டிக் கொடுத்த கொடையைப் பற்றி கூறுகின்றது. ஆண்டுக்குக் கொங்கத்தால் தூணி தினையும் ஊரால் ஒரு புழகும் அளிக்கப்பெற்றது.
The Rajathiraja-II’s 9th reign year inscription on the sanctum sanctorum south side wall records the supply of grains/ millets by the Malaiayala nattars to Veetrirunthan Somandar alias Pillai Agalanga Nadalwars.

இரண்டாம் இராதிராஜனின் 9ஆவது ஆட்சியாண்டு ( 1172 CE ) கருவறையின் தென்புறச்சுவரில் உள்ள பிற்பகுதி சிதைந்த கல்வெட்டு  பாண்டி குலாசனி வளநாட்டு இடையாற்று நாட்டுத் திருத்தவத்துறை யுடைய வீற்றிருந்தான் சேமாண்டரான பிள்ளை யகளங்க  நாடாழ்வார்க்கு வீரசோழ மண்டலத்துக் கொல்லிமலை நாட்டைச் சேர்ந்த பல ஊரினர் அளித்த ஒர் உடன் பாட்டைத் தெரிவிக்கிறது.
Rajathirajan-II’s 9th reign year ( 1172 CE ) south side wall of Sanctum Sanctorum damaged inscription records an agreement made between Pandya Kulasini Valanattu Idaiyatru Nattu Thiruthavathurai Veetrirunthan Somandar alias Pillai Agalanga Nadalwar and many villagers of Veera Chozha mandalathu Kolli Hills.

இரண்டாம் இராதிராஜனின் 9ஆவது ஆட்சியாண்டு ( 1172 CE ) கருவறையின் தென்புறச்சுவரில் உள்ள கல்வெட்டு வீற்றிருந்தாந் சேமாண்டாரான பிள்ளை அகளங்க நாடாழ்வார்க்குக் கொல்லிமலை நாட்டு மலையாளர்கள் ஒன்பதாவது ஆண்டு முதல் தாங்கள் வரி செலுத்துவதாக உடன்பட்டுத் திருவறப்பள்ளியுடையார் திருக்கற்றளியில் கல்வெட்டிக் கொடுத்தமையைப் பதிவு செய்கின்றது,
Rajathirajan-II’s 9th reign year ( 1172 CE ), south side of sanctum sanctorum inscription  records that the Killimalai Malayalis agreed to pay taxes from 9th year to Veetrirunthan Somandar alias Pillai Agalanga Nadalwar.

இரண்டாம் இராதிராஜனின் பத்தாவது ஆட்சியாண்டு ( 1173 CE )  கருவறையின் தென்புறச்சுவரில் உள்ள கல்வெட்டு விற்றிருந்தான் சேமாண்டாரான அகளங்க நாடாழ்வான் என்பவன் கொல்லிமலை கொண்ட காலத்தில் திருக்களிற்றுப்படி நம்பி என்பான் அறப்பள்ளி இறைவர்க்கும் நாச்சியார்க்கும் மார்கழித் திருவாதிரை நோன்புக்கு வெருணூர்ப்பள்ள வழியில் நிலம் விட்ட செய்தியைப் பதிவு செய்கின்றது.
Rajathirajan-II’s, 10th reign year inscription on the South side wall of sanctum sanctorum records that  during the incharge of Veetrirunthan Somandar alias Pillai Agalanga Nadalwar, a land was gifted to Shiva and Ambal / Nachiyar  for conducting  the Margazhi Thiruvathirai Nonbu by ThirukaliRRupadi Nambi

பொயு 12 ஆம் நூற்றாண்டு கருவறையின் வடக்குப்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு கருங்கயம் என்னும் ஊரிலிருந்த பல குடிகளும் சேர்ந்து பதினெட்டரைக் கழஞ்சுப் பொன் கொடுத்தனர். ஒரு கழஞ்சுக்கு ஆறு திங்களுக்கு வட்டியாகத் தூணி நெல் வீதம் பெறப்பட்டது. அந்நெல்லைக் கொண்டு திருவறப்பள்ளி உடையார்க்குச் சந்திக்கு அமுது படைக்கப் பெற்றது. இவ்வாறே காமுளூர் ஊரின் பல குடிகளும் ௮ளித்தனர் அது ஆடவல்லார் நடராசப் பெருமானுக்குப் படைக்கப் பெற்றது. வெருவணூர் திசைமாணிக்கச் செட்டி நிலத்தின் பல குடிகள் சேர்ந்து நம்பிராட்டியார் கோவிலுக்குப் படையல் அளித்தனர்.
A 12th century inscription on the north side of sanctum Sanctorum records that 12.5 Kalanju gold was given by many Karungayam families. Thooni ( a measure ) Paddy was received by them as an interest / 6 months. Naivedyam was offered to Thiruvarapalli Udayar. The same was Kamuloor people also gave donations. This was offered to Natarajar. From the Veruvanur  Thisaimanicka Chetti land Villager’s donation, naivedyam was offered to Nampiratiyar. 

பொயு 12 ஆம் நூற்றாண்டு பொன்னேரி வர்மனின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டு கருவறையின் வடக்குப்புறச்சுவரில் உள்ள கல்வெட்டு அறப்பள்ளி இறைவர்க்கு இரு நந்தாவிளக்குகள் வைக்க ஆவன செய்யப்பெற்று அவரால் நிலமும் கொடுக்கப்பெற்றது. இச்செய்தி ஒரு செப்பேட்டின் மெய்புப்படி என்றும் குறிப்பிடப் பெற்றுள்ளது. இக் கல்வெட்டின் சில பகுதிகள் கிடைக்கப் பெறாமையால் செய்தித் தொடர்பை அறிய இயலவில்லை.
A 12th  Century inscription on the North wall of sanctum sanctorum records the 22nd reign year of Ponnerivarman’s endowment of burning two perpetual lamp, for the same a land was gifted. The inscription also mentions that this is a duplicate copy of the the Cheppedu.  The details of the full inscription was not known since some of the portions are not legible.

பொயு 12 ஆம் நூற்றாண்டு கருவறையின் மேற்குப்பக்கம் உள்ள கல்வெட்டு ஒன்று வீராணச்செட்டி பெற்ற இருபத்தைந்து கழஞ்சு பொன்னுக்கும் கழஞ்சுக்கு ஆறு மாதத்திற்குத் தூணி நெல்லாக ஆண்டுக்கு நெல் பதினாறு கலனே இருதூணி நெல்லைக் கொண்டு “கறடிகை” என்னும் கருவியை இசைக்கும் இசைஞனுக்கு நாள் ஒன்றுக்கு கொங்கத்தால் மூன்று நாழியாக ஆண்டுக்குப் பதினொரு கலனே முக்குறுணி அளிக்கப்பெற்றது. எஞ்சிய ஐங்கிலனே ஐங்குறுணி நெல்லைக் கொண்டு திருவறப்பள்ளியுடையார்ககு மூன்று சந்திக்கும் படைக்கப் பெற்றமையைப் பதிவு செய்கின்றது.
A 12th Century inscription on the west side of sanctum sanctorum  records the payment of pady to a musician called Karadigai and 3 sandhi / times naivedyam to Thiruvrapalliuadayar for the 25 Kalanju gold received by Veeranachetti.

விஜயநகர அரசர் வேங்கடபதி மகாராயரின் 01-02-1612 ந்தேதியிட்ட அறப்பள்ளி ஈசுவரர் கோவில் வடக்குப்புறச்சுவரில் உள்ள கல்வெட்டு நரலோக கண்ட வங்கி நாராயணணன் கோனூர் இராமச்சந்திர நாயக்கர் மகன் இம்முடி இராமச்சந்திரர் காலத்தில் அறப்பள்ளி ஈசுவரர் கோவில் திருப்பணி நடைபெற்றது. அந்நாளில் நாச்சியார் திருமேனி ஒன்றையும் எழுந்தருளுவித்தார். சுத்தமலை நாட்டின் அசை என்ற ஊர் அக்கோவிலுக்குச் சர்வமானியமாக அளிக்கப்பெற்றது. அவ்வூர் இன்று “அசக்காடு" என்று வழங்கப்பெறுகிறது.
The Vijayanagara King Venkadapathy Maharaya’s inscription records that during the reign of Naraloka Kanda Vangi Narayanan Konoor Ramachandra nayaka’s son Immudi Ramachandar, thirupani was carried out in the temple. During that time an Image of nachiyar was installed. For the same Suddhamalai nattu Asai Village was gifted to this temple as sarvamanyam.

அறப்பள்ளி ஈசுவரர் கோவில் வடக்குப்புறச்சுவரில் 14.08.1770 ந் தேதி கல்வெட்டுகுடவாசல் உடையான் திருநாதர் சங்கமதேவன் என்பான் அறப்பள்ளிஈசுவரர்க்கும்,நாச்சியார்க்கும்இளைய நாயனார்க்கும் வழிபாட்டின் பொருட்டு நிலமும் நந்தவனமும் கொடையாகக் கொடுத்தமையைப் பதிவு செய்கின்றது.
 14th Aug 1770, inscription records that Kudavasal Udayan Thirunathar Sangamadevan, gifted as land and Nandhavanam  for the worship of Shiva, Ambal and Murugan.

அறப்பள்ளி ஈசுவரர் கோவில் வடக்குசுற்றுச் சுவரில் உள்ள  06.02.1661 ந்தேதி கல்வெட்டு அறப்பள்ளி ஈசுவரர் தாயம்மனுக்குத் திருக்குடமுழுக்குச் செய்யப் பெற்றமையைப் பதிவு செய்கின்றது.
The 06th Feb 1661, dated inscription records the Kumbhabhishekam to Shiva and Thayammai sannidhis of this temple.

அறப்பள்ளி ஈசுவரர் கோவில் தாயம்மை சன்னதியின் கிழக்குப்புறச்சுவரில் உள்ள 11.09.1823 ந்தேதி கல்வெட்டு அறப்பள்ளி ஈசுவரர்க்கும் தாயம்மைக்கும் துறையூர் வட்ட இராச நரசிங்கராயர் ஆட்சி செய்த நாளில் அம்மனுக்கு விமானம் அமைத்துத் திருகுடமுழுக்குச் செய்யப் பெற்றமையைப் பதிவு செய்கின்றது.
The 11th September 1823 dated inscription on the Thayamai sannidhis east wall records the construction of Vimanam to Ambal sannidhi and conduct of Kumbhabhishekam during the reign of Thuraiyur vatta Raja Narasingarayar’s rule.




திருவறப்பள்ளியுடைய 
This inscription records the construction of Kasi Viswanathar and Visalakshi Sannidhis in 1985
Kasi Viswanathar and Visalakshi Sannidhis i

LEGENDS
It is believed that, during the process of cultivation, a farmer’s plough hit the top of the Shiva Lingam. The blood was oozing out. When the farmer excavated and found out a Shiva Lingam. He does the Poojas. Still the plough mark can be seen on the top of the Shiva Lingam.

This region Kollimalai was ruled by the Chera King Valvil Ori one of the Kadai Ezhu Vallas ( one of the last 7 philanthropist Kings ). The name signifies that he was a great warrior. He was capable shotting, an Elephant, deer, wild pig, and other animals with a single arrow. Hence he was called as valvil ori. He ruled the region of Arappalli.

In another legend, devotees used to feed the fishes in the river, considering fishes are in the form of Arappaleeswarar. A devotee caught a fish from the river Panchanadhi and started cooking to eat. When, the curry gets boiled, the fish pieces joined together with the blessing of Shiva, jumped out and ran in to the river.

POOJAS AND CELEBRATIONS
Apart from regular poojas special poojas are conducted on Pradosham, Adiperukku, Maha Shivaratri, Karthigai Deepam, Annabhishekam, etc,.

TEMPLE TIMINGS
The temple will be kept opened between 07.00 hrs to 13.00 hrs and 14.30 Hrs to 19.00 Hrs.

CONTACT DETAILS
The Mobile number +91 9786645101 may be contacted for further detail.

HOW TO REACH
Sri Arappaleeswarar temple is about 10 KM from Kolli Hills, 55 KM from Namakkal, 90 KM from Salem.
Nearest Railway station is Salem Junction.

LOCATION OF THE TEMPLE : CLICK HERE



Jyeshta Devi / Thavvai 



Agasthiyar Temple before Sri Arappaleeswarar Temple 
--- OM SHIVAYA NAMA ---

No comments:

Post a Comment