Thursday, 17 October 2019

A JAIN TEMPLE WITH PARSVANATH TIRTHANKARAS AND HINDU DEITIES JYESHTA & VAISHNA SCULPTURES, ( A 10th to 12th CENTURY JINALAYA ) UNEARTHED AT THUMBURU IN CHITTOOR DISTRICT, ANDHRA PRADESH.

6th October 2019.
The visit to this place Thumburu was a part of Ahimsa Walk organized by the Tamil Jains on 6th October 2019. After Arungulam Sri 1008 Dharmanatha Tirthankara’s dharshan, we came to  this place. About 70 and odd Jains and non Jains  from all walks of  life participated in this Ahimsa walk.  An Ahimsa Walk Procession was held through the streets of the village and ends at this Jinalaya.

The half buried Jinalaya was unearthed in the recent years.  The Jinalaya was buried during excavation of a lake and the bund was raised with the excavated soil. The bund soil completely covered the Jinalaya since it was on the bund.  In connection with our Ahimsa walk, the soil and the entrance was cleared with the help of JCB and inside the sanctum sanctorum was also cleaned with the help of local people. As per the local people, this temple was called as Ammalamma Temple and Tirthankaras as Buddhas.

அஹிம்சை நடையை ஒட்டி ஏரியின் கரையில் மறைந்து இருந்த இந்த ஜீநாலயம் உள்ளூர்வாசிகளின் ஒத்துழைப்புடன் ஜேசிபி மூலம் களிமண் அகற்றப்பட்டு  வெளிக்கொணரப்பட்டது. வழிபாட்டிற்க்கு ஏற்ப மண்டபம் மற்றும் கருவறையில் இருந்த களிமண் முற்றிலும் அகற்றப்பட்டது. ஜீநாலயம் கருவரை மற்றும் அர்த்தமண்டப அமைப்புடன் கட்டப்பட்டு இருந்தது. உள்ளூர்வாசிகள் ஜீநாலயத்தை அம்மாளம்மா கோயில் எனவும் தீர்த்தங்கரர்களை புத்தர் என் அழைப்பதாகவும் கூறினர்.
  
The Jinalaya was built with  Sanctum Sanctorum  and an arthamandapam. The sanctum sanctorum is facing south with an entrance from east. There are two Parshvanath Tirthankara images in side the sanctum Sanctorum. Both the Tirthankaras are in good shape with 5 headed snake and Mukkudai. The Srivatsam,  Sangu (  Conch ) and Chakra are chiseled  near shoulder on both sides.  Thiruvasi is also shown behind the Tirthankara images. Mr Vijaya Kumar, a retired ASI official explained the above features and told that these are Suparswanath Tirthankaras. Further he pointed out the similarities between the Village name and the 5th Tirthankara Sumatinath’s  yakshini name as Thumburu.  Experts are of the opinion that these images with Jinalaya may belongs to 10th to 12th Century.
  
கருவறை தெற்கு நோக்கியும், உள்ளே செல்ல கிழக்கு பக்கத்தில் வாயிலும் இருந்தது. கருவறையில் இரண்டு தீர்த்தங்கரர்கள் சிற்பங்கள் திருவாசி, தலைக்கு மேலே பாம்பு குடையுடன் முக்குடையும் காணபட்டது. ஸ்ரீவத்சம், சங்கு, சக்கரம் காட்டப்பட்டு இருப்பதால் இந்து சமயத்தினரும் வழிபட அவைகள் வடிக்கப்பட்டு இருக்கலாம் என இந்திய தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு விஜய குமார் அவர்கள் கூறினார். மேலும் இவ்விரு தீர்த்தங்கரர்கள் சுபார்ஸ்வநாத் தீர்த்தங்கரர் சிற்பங்கள் எனவும் 10ல் இருந்து 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்ற கருத்தைத் தெரிவித்தார். 5வது தீர்தங்கரர் சுமதிநாத் பகவானின் யக்ஷினியின் பெயர் தும்புறு ஆனதால் அந்தப் பெயராலேயே இவ்வூர் தும்புறு என அழைக்கப்படும் ஒற்றுமையையும் கூறினார்.

In addition to the Tirthankara images a Jyeshta Devi,  Vishnu as Chennakesava and headless Sridevi’s images are found in the arthamandapa.  It was told that the presence of Hindu deity images, signifies that Hindus also worshiped the deities of this temple.  The Jyeshta Devi’s sculpture is an evidence that this Jinalaya belongs 10th to 12th Century since, the worship of Jyeshta Devi was discontinued after 12th Century.

மேலும் அர்த்தமண்டபத்தில் தவ்வைதாய் எனப்படும் ஜேஸ்டா தேவி சிற்பம், சென்னகேசவ பெருமாள் மற்றும் தலை இழந்த ஸ்ரீதேவி சிற்பங்களூம் இருந்தன. ஒரு சமண சமய கோயிலில் இந்து சமய சிற்பங்கள் இருப்பது அக்கால மத நல்லினக்கதையும், சமணரும் இந்துக்களும் ஒரே கோயில் தொழுததையே காட்டுகின்றது. மேலும் 12 ஆம் நூற்றாண்டுக்கு பின்பு ஜேஸ்டாதேவி வழிபாடு தொடரவில்லையாதலால், இக்கோயில் அல்லது ஜீநாலயம் 10ல் இருந்து 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
  
LOCATION: CLICK HERE



 Jyeshta Devi


 The entrance of the Jinalaya 
  Vishnu as Chenna Kesava and headless Sridevi
 The excavated lake

 Ahimsa walk
 Ahimsa walk
Ahimsa walk
---OM SHIVAYA NAMA--- 

No comments:

Post a Comment